அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா. பழூர் ஊராட்சி ஒன்றியம், இருகையூர் ஊராட்சி, கோட்டியாலில், தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் அறிவிப்பின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் அவர்கள் வழிகாட்டுதலின்படி, ரூபாய் 3. 35 கோடி மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய புதிய மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்டார பொது சுகாதார அலகு கட்டடங்களின் திறப்பு விழா, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் M. அஜித்தா அவர்கள் வரவேற்புரையில், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு பொ. ரத்தினசாமி அவர்கள் தலைமையில்,
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க. கண்ணன் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றதில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் புதிய கட்டடங்களை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.