ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வகையில், EPFO உறுப்பினர்களுக்கு மே- ஜூன் மாதத்திற்குள் டெபிட் கார்டு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும், உறுப்பினர்களுக்கு வங்கி சேவைகளை வழங்கும் EPFO 3.0 மொபைல் செயலி வரும் ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் நடைமுறை மிகவும் எளிதாகும் என கூறப்படுகிறது.