ஜோதிட சாஸ்திரங்களின்படி செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்கள் முடி வெட்டக்கூடாது என கூறப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை செவ்வாய் கிரகத்துக்கு உகந்த நாள். இந்த நாளில் இரத்தத்தின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பதால் முடி வெட்ட பரிந்துரைப்பதில்லை. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வாசம் செய்யும் நாள் என்பதாலும், சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள் என்பதாலும் இந்த மூன்று நாட்களும் முடி வெட்டுதல் கூடாது என கூறப்படுகிறது.