சைபர் மோசடியில் இருந்து தப்பிக்க பழைய ஸ்மார்ட் போனை விற்பதற்கு முன் அல்லது எக்ஸ்சேஞ்ச் ஆபரில் கொடுப்பதற்கு முன் யுபிஐ செயலிகள் அனைத்தையும் நீக்க வேண்டும், போனில் உள்ள தொடர்பு தகவல்கள், எஸ்எம்எஸ் போன்ற அனைத்தையும், பேக்கப் செய்ய வேண்டும். புகைப்படங்கள், வீடியோக்கள், மல்டி மீடியா கன்டென்டுகளை தவறாமல் பேக்கப் செய்து எடுத்துக் கொள்ளவும். எல்லா தரவுகளையும் பேக்கப் செய்து கொண்ட பின் ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டியது அவசியம்.