தவெகவின் முதல் பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, "மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, உங்கள் ஆட்சியை பற்றி கேள்வி கேட்டால் ஏன் கோபம் வருகிறது. நீங்கள் சரியாக ஆட்சி நடத்தினால் ஏன் இவ்வளவு பிரச்சனைகள் தமிழகத்தில் நடக்கிறது. இதில் பெண்கள் உங்களை 'அப்பா' என கூப்பிடுவதாக சொல்கிறீர்களா. அந்த பெண்கள் தான் உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்ட போகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்றார்.