"கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம்"

53பார்த்தது
"கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம்"
அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிகமாக பேசியதே அண்ணாமலைதான். கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும். விலகினால் அவ்வளவுதான். பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது, விலகியது தான்" என திட்டவட்டமாக கூறிய எஸ்.பி.வேலுமணி "அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும்" என காட்டமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி