கோவில் திருப்பணிகள் செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு

63பார்த்தது
கோவில் திருப்பணிகள் செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு
1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களுக்கு திருப்பணிகள் செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அவர், சுற்றுலா வளர்ச்சிக் குழுமங்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்படும். திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோவில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும். ரூ.5,718 கோடி மதிப்பிலான 6,071 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கரூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ரூ.20 கோடி செலவில் 10 சிறிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். ரூ.25 கோடி செலவில் தொழில்நுட்ப சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி