விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து ஆதவ் அர்ஜுனா வாழ்த்துப் பெற்றார். தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா. மேலும், திருமாவிற்கு ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை பரிசாக வழங்கினார். அம்பேத்கர், பெரியார் இருக்கும் சிலையையும் வழங்கினார்.