நடிகை த்ரிஷாவின் வளர்ப்பு நாய் மரணமடைந்ததால் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், 'எனது மகன் சொர்ரோ கிறிஸ்துமஸ் நாளில் இறந்துவிட்டான். என்னைப் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் என் வாழ்வில் சொர்ரோ எவ்வளவு முக்கியமானவன் என்று. நானும் எனது குடும்பமும் அவனது பிரிவால் உடைந்து விட்டோம். இதிலிருந்து மீண்டு வர சிறிது காலம் ஆகும்' என குறிப்பிட்டுள்ளார்.