அண்ணாமலையை ஆதரிக்கும் நடிகர் விஷால்?

79பார்த்தது
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ரத்னம் படத்தின் விழாவில், ரசிகர் ஒருவரின் கேள்விக்கு விஷால் பதில் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் அந்த ரசிகர், நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள் "இபிஎஸா, ஓபிஎஸா" என கேட்கிறார். அதற்கு விஷால் சிரித்தவாறு, "ஐபிஎஸ்" எனக் கூறினார். இதன் மூலம் தான் ஆதரிப்பது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை என மறைமுகமாக கூறியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் விஷால் பாஜகவில் விரைவில் இணைவார் என பேசப்பட்டு வரும் நிலையில், அவரின் இந்த பதில் அதை உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி