தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உணவுப்பொருள் வழங்கல் துறை தகவல் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாடு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற அமுதம் அங்கன்வாடிகள் விரிவுப்படுத்தப்பட உள்ளன. டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் போட்டியை சமாளிக்கவும், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும் கூடுதலாக அமுதம் அங்காடிகள் அமைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.