பாலியல் தொழிலாளிகளிடம் சில்மிஷம்... போதை ஆசாமிக்கு தர்ம அடி

61பார்த்தது
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் விழுந்து கிடந்த போதை ஆசாமி ஒருவர் பாலியல் தொழில் செய்யும் 2 பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அப்பெண்கள் போதை ஆசாமியை தகாத வார்த்தைகளில் திட்டி, தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும், அவரிடம் பணம் பறிக்கவும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, அருகில் இருந்த போலீசார் மூவரையும் புறக்காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில் பாலியல் தொழில் செய்யும் பெண்களும் குடிபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி