நடிகர் அமீர்கான் தனது நீண்ட நாள் கனவான மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்று அடிக்கடி பேசியுள்ளார். இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் கான், மகாபாரதத்தின் பதிப்பைத் தயாரிப்பது பற்றி பேசியுள்ளார். அதாவது "மகாபாரதம்' படத்தை உருவாக்குவது எனது கனவு, நானும் எனது குழுவும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். தற்போது எழுத்துப் பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் நிறைவேறும்" என்று கூறியுள்ளார்.