நீண்ட நேரம் உட்கார்ந்துகொண்டே
வேலை பார்ப்பவர்களுக்கு மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இறப்பு அபாயம் 16 சதவீதம் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீண்ட நேரம் உட்கார்ந்து
வேலை செய்பவர்களுக்கு இதயத்தில் பிரச்னைகள் ஏற்படும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரும் அபாயம் அதிகம் உள்ளது. தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்வது ஓரளவு நல்ல பலனை கொடுக்கும்.