நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே டிப்பர் லாரி டயரில் விழுந்த இருசக்கர வாகன ஒட்டி நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. லாரிக்கு முன்னாள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி, சாலை ஓரமாக சரக்கு வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது பின்னே வந்த டிப்பர் லாரியின் சக்கரம் அவரது தலை அருகே சென்றதில் நூலிழையில் உயிர் தப்பினார்.