ஸ்மோக் பீடா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை

75பார்த்தது
ஸ்மோக் பீடா சாப்பிட்ட சிறுமிக்கு வயிற்றில் ஓட்டை
பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பீடா வழங்கப்பட்டுள்ளது. அப்போது 12 வயது சிறுமி ஒருவர் இந்த ஸ்மோக் பீடாவை ஆசையாக வாங்கி சாப்பிட்டுள்ளார். இருப்பினும், ஸ்மோக் பீடாவை சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அந்த சிறுமிக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு பெர்ஃபோரேஷன் பெரிட்டோனிடிஸ், அதாவது வயிற்றில் துளை என்ற நிலை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி