பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

71பார்த்தது
மதுரை கப்பலூர் அருகே உள்ள தொழிற்பேட்டையில் பார்சல் சர்வீஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு, எதிர்பாராத விதமாக இன்று (ஜூலை 24) திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிய அளவில் ஏற்பட்ட தீ, கட்டடம் முழுவதும் பரவியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இந்த பயங்கர தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்

தொடர்புடைய செய்தி