78 பேரை காவு வாங்கி படகு விபத்து (வீடியோ)

63பார்த்தது
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள மினோவா என்ற இடத்திலிருந்து கோமா என்ற பகுதிக்கு 278 பயணிகளுடன் படகு நேற்று(அக்.3) சென்றுள்ளது. அதிக பாரம் காரணமாக திடீரென படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அனைவரும் ஆற்றில் மூழ்கிய நிலையில், 78 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், படகு கவிழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி