71 வயதில், ஒரு பாட்டி உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் வீடியோ எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளது. இதற்காக, 2017ல் தனது 71வது வயதில் உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கினார். பிறகு குண்டாக இருந்த பாட்டி அர்ப்பணிப்புடன் தினசரி உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தார். 2024 ஆம் ஆண்டு வரை அதாவது 78 வயதில் தசைநார் உடலைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.