காயங்களுடன் 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு.!

77பார்த்தது
காயங்களுடன் 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு.!
ம.பி., ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகளை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீட்டுள்ளது. ஆலையில் 58 குழந்தைகள் கடுமையான ரசாயனங்கள் மற்றும் மது தயாரிப்பால் கையில் தீக்காயங்களுடன் மீட்க்கப்பட்டனர். அவர்கள் தினமும் 12 - 14 மணி நேரம் வேலை செய்துள்ளனர். இதுகுறித்து ம.பி., முதல்வர் மோகன் யாதவ் தனது X தளத்தில், “விரிவான தகவல்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்” எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி