வடக்கு மாசிடோனியாவில் நைட் க்ளப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோக்கானி நகரில் உள்ள நைட் கிளப்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது அதிகாலை 2:35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில், 51 பேர் உடல்கருகி உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வானவேடிக்கையால் க்ளப்பின் மேற்கூரை தீப்பிடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.