உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான ஆப் லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. அந்த லிங்க்கை கிளிக் செய்துவிட்டால், உங்களது போனில் உள்ள தரவுகள், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும். மேலும், உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்துவிட வாய்ப்புள்ளது. எனவே வாட்ஸ்-அப்பில் வரும் போலி புத்தாண்டு வாழ்த்து செய்திகளை தவிர்க்க வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.