தென்னாப்பிரிக்காவில் காணப்படும் கேப் கோப்ரா எனப்படும் பாம்பு வகை உலகிலேயே அதீத விஷத்தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும் இவை 2 மீட்டர் வரை வளரக்கூடியது. இந்த பாம்புகளில் இருக்கும் விஷம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. விஷம் உடலில் ஏறியவுடன் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி சுவாசக் கோளாறு, தசைகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழக்கும் அபாயமும் உண்டு.