இனிப்பான செய்தி: ‘பொங்கல் தொகுப்புடன் முழுக் கரும்பு’

74பார்த்தது
இனிப்பான செய்தி: ‘பொங்கல் தொகுப்புடன் முழுக் கரும்பு’
தமிழ்நாடு மக்களுக்கு, பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நா. சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரும்பு கொள்முதலில் மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச கொள்முதல் விலை ரூ.35ஆக இருக்க வேண்டும். பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பை தோகையை வெட்டாமல் முழுதாக வழங்க வேண்டும்” என அதில் உத்தரவிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறவுள்ள பயனாளிகளுக்கு வரும் ஜன.3ஆம் தேதி முதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி