புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்று(ஜன.1) காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது கடந்த 2021ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டதால் அதன் விலை குறைந்தது. இந்நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை உயர்த்த கடந்த டிச.27 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.96.26க்கும், டீசல் விலை ரூ.1.99 உயர்த்தப்பட்டு ரூ.86.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது.