பத்தாம் வகுப்பு மாணவனுடன் காதல் வயப்பட்டு அவரை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்ற இளம்பெண் உட்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைதாகினர். சென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவர் டியூசன் சென்று படித்துள்ளார். அப்போது டியூசன் ஆசிரியையின் தங்கையான 22 வயது பெண் அச்சிறுவனுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இதையடுத்து இருவரும் மாயமான நிலையில், புகாரின் பேரில் போலீசார் அவர்களை புதுச்சேரியில் வைத்து பிடித்தனர். தொடர்ந்து அந்த இளம்பெண்ணும் அவருக்கு உதவிய நபர் என 2 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.