தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 2 நாட்கள் நடைபெறும் நிலையில் இன்று(டிச.09) காலை தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சி.பி.எம். முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, ரத்தன் டாடா, எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மான உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். மேலும் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 3-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.