ஹர்திக் பாண்டியாவிற்கு 2024 வருடம் சோதனைக்கு மேல் சோதனை தான். MI அணியின் ரசிகர்களால் மைதானத்தில் அவமானப்படுத்தப்பட்டது. மனைவி நடாஷாவை பிரிந்தது என ஹர்திக் வாழ்க்கையில் அடிக்கு மேல் அடிதான். 'அவ்ளோ தான் நம்மல முடிச்சி விட்டீங்க போங்க..' என ஹர்திக் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆனால் T20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தனது ஆபார பவுலிங் மூலம் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றினார் ஹர்திக். 'கொஞ்சம் இருங்க பாய்' என மீண்டெழுந்துள்ள பாண்டியாவிற்கு சபாஷ்.