“திமுக ஆட்சியில் 15 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது”

76பார்த்தது
திமுக ஆட்சியில் 15 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில்,"நேற்று (ஆகஸ்ட் 12) நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம்" என்று தெரிவித்துள்ள அவர் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி