111 அடியில் சிவனுக்கு தங்கசிலை

4970பார்த்தது
111 அடியில் சிவனுக்கு தங்கசிலை
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள புகழ்பெற்ற சுர் சாகர் ஏரியின் மையத்தில் 111 அடி உயரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மஞ்சல்பூர் எம்எல்ஏ யோகேஷ் படேல் தலைமையிலான 'சத்யம் சிவம் சுந்தரம் சமிதி' என்ற அறக்கட்டளை ரூ.12 கோடி மதிப்பிலான 17.5 கிலோ தங்கத்தை கொண்டு இதை அமைத்துள்ளது. 1996ஆம் ஆண்டில், சிலை செம்பு கொண்டு நிறுவப்பட்டது. அதற்கு தங்க முலாம் பூச முடிவு செய்யப்பட்டது. இந்த விஷயங்களை எம்எல்ஏ சமீபத்தில் வெளியிட்டார். இந்த சிலையை மகாசிவராத்திரியை முன்னிட்டு வதோதராவுக்கு முதல்வர் பூபேந்திர படேல் அர்ப்பணிக்கிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி