கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்கும் விதமாக, 100 வீடுகள் கர்நாடக அரசு சார்பில் கட்டித்தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். முன்னதாக நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதியளித்திருந்தார். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர் வீடுகளை இழந்துள்ளனர்.