காரியாபட்டியில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காரியாபட்டி தாசில்தார் சுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு வார காலத்தில் புறம்போக்கு இடத்தை தேர்வு செய்து இடம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி