இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 18ஆவது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் வெற்றி பெற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்குத்தான் அதிக வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “தற்போதைய சன்ரைசர்ஸ் அணியின் பிளேயிங் லெவன் சிறப்பாக உள்ளது. இந்த அணி பார்மில் இருந்தால், இறுதிப் போட்டிக்கு வந்து கோப்பையை வெல்லும்” என்றார்.