டாஸ்மாக்க்கில் ரூ.1000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக சார்பில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அண்ணாமலை, "திமுக அரசின் இந்த மெகா ஊழலைக் கண்டித்து, வரும் மார்ச்.17 அன்று, தமிழ்நாடு பாஜக சார்பாக, டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் தாளமுத்து நடராஜன் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.