அதன்படி வேலூர் பதிவு மண்டலத்தில் உள்ள 45 சார்பதிவாளர் அலுவலகங்கள் நேற்று முன்தினம் செயல்பட்டன. பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் ஆவணங்களை பதிவு செய்தனர். வேலூர் பதிவு மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, செய்யாறு, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய பதிவு மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 375 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதன் மூலம் ரூ. 1 கோடியே 98 லட்சத்து 13 ஆயிரத்து 654 வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.