மத்திய பிரதேசம்: காதலனை மணக்க மகள் வீட்டை விட்டு ஒடியதால் தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் ரிஷிராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், "மகளே ஹர்சிதா.. நீ செய்தது தவறு. நான் உன்னையும் உன் காதலனையும் கொன்றிருக்கலாம்.. ஆனால் என்னால் எப்படி என் மகளை கொல்ல முடியும்? அதனால் நான் போகிறேன்" என எழுதியுள்ளார். கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.