வருகின்ற மார்ச் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் மங்கள இசை கணபதி ஹோமம் நவகிரக யாகம் மகாலட்சுமி யாகம் பூரணாகுதி தீபாராதனை நடைபெற்று காப்பு கட்டுதல் நடைபெற்றது. கணபதிபாளையம் ஊர் பொதுமக்கள் பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீராம சமுத்திரம் காவேரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி அங்கிருந்து மேல மஞ்சள் மேடு கீழமஞ்சள் மேடு மாவலி பட்டி அக்ரஹாரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேசர் ஆலயத்தில் மயிலாட்டம் குதிரை ஆட்டம் காவடி ஆட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக 500 க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் விபூதி குடம் பால்குடம் எடுத்து கணபதிபாளையம் பகவதி அம்மன் கோவில் வந்தடைந்தனர். பின்பு பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

புற்றுநோயால் விபரீதம்.. மனைவியை சுட்டுக்கொன்று கணவர் தற்கொலை