ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு

ராஜஸ்தானுக்கு எதிரான குவாலிபையர் 2-வது ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. கிளாசென் (50) அரைசதம் அடித்து அசத்தினார். தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா (12), டிராவிஸ் ஹெட் (34) ரன்கள் மட்டுமே எடுத்தனர். ராகுல் திரிபாதி (37), ஷாபாஸ் (18) ரன்கள் எடுத்தனர். பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் சந்தீப் சர்மா, ஆவேஸ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி