டிராகன் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியீடு

64பார்த்தது
டிராகன் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியீடு
இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இவர் அசோக் செல்வன் நடித்த 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், டிராகன் படத்தின் ரிலீஸ் அப்டேட் வௌியாகி உள்ளது. அதன்படி இத்திரைப்படத்தை வரும் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த லவ் டுடே திரைப்படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தொடர்புடைய செய்தி