அரிசி மூட்டைகள் முளைத்ததாக பழைய படத்தை பரப்பும் நியூஸ் ஜெ

81பார்த்தது
அரிசி மூட்டைகள் முளைத்ததாக பழைய படத்தை பரப்பும் நியூஸ் ஜெ
விற்பனைக்கு தயாராக இருந்த அரிசி மூட்டைகள் முளைத்துவிட்டதாக கூறி நியூஸ் ஜெ சேனலில் புகைப்படம் ஒன்று வெளியானது குறித்து தமிழக அரசு உண்மை சரிபார்ப்பு நிலை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இப் புகைப்படம் 2020 டிசம்பர் மாதம் எஸ். கொளத்தூரில் எடுக்கப்பட்டது. 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் வருவதற்கு முன்பாக, ராணிப்பேட்டை நெமிலி அருகே எஸ். கொளத்தூர் பகுதியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து வைத்துள்ளனர். அப்போது கனமழையால் நெல் மூட்டைகளில் நாற்றுகள் முளைத்துள்ளன என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி