தஞ்சை தலைமைத் தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் சி. ராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கஸ்தூரி,
மாவட்ட பொருளாளர் மோகன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி. எம். இளங்கோவன் கண்டன உரையாற்றினார். கிளைச் செயலாளர் காஞ்சனா, பிரேமா, பாலா, ராஜமுருகன், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் தங்கப்பன், ஒன்றியச் செயலாளர் மதியழகன், தஞ்சை ஒன்றிய செயலாளர் சாமியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், நிதிநிலை அறிக்கை நகலுக்கு தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.