தஞ்சாவூர் மாவட்டத்தில் 114 அதிவிரைவுப்படை அமைப்பு -ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை சுமுகமாகவும், அமைதியாகவும் நடத்த 114 அதி விரைவுப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறை அலுவலர்களை பணியமர்த்தும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல்
அலுவலரும் ஆட்சியருமான தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் முன்னிலை வகித்தார்.

கூட்டத்துக்கு பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் கூறியது: தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறை அலுவலர்களை தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவையாறு, கும்பகோணம், பாபநாசம் ஆகிய
சட்டப்பேரவை தொகுதிகளில் பணியமர்த்தும் திட்டம் குறித்தும், அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, எப்போதும் இல்லாத அளவுக்கு 114 அதிவிரைவுப் படைகளைக் கொண்டு தேர்தலை சுமுகமாகவும், அமைதியாகவும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரவீனா குமாரி, காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி