ஆந்திரா, தெலங்கானா மாநில தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாகிறது!

59பார்த்தது
ஆந்திரா, தெலங்கானா மாநில தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாகிறது!
ஆந்திரா, தெலங்கானான உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வரும் 18ஆம் தேதி வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது. ஆந்திராவில் 25 மக்களவை மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், தெலுங்கானாவில் 17 மக்களவை மற்றும் ஒரு சட்டசபை தொகுதிக்கும் (இடைத்தேர்தல்) மே 13ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இம்மாதம் 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 26ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் 29ஆம் தேதி வாபஸ் பெறலாம். அதே நாளில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி