பூதலூர் அருகே தீராத வயிற்று வலியால் பூச்சி மருந்தை குடித்தவர் சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே நவலூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அடைக்கலசாமி மகன் ஆரோக்கியதாஸ் (51). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். இந்நிலையில் 15ஆம் தேதி இரவு வலி அதிகமாக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தவர் மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆரோக்கியதாஸ் மகன் பிரகாஷ்ராஜ் பூதலூர் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.