மதுக்கடைகள் மூடல் - மதுப் பிரியர்கள் தவிப்பு

56பார்த்தது
மதுக்கடைகள் மூடல் - மதுப் பிரியர்கள் தவிப்பு
ஸ்ரீராம நவமியை முன்னிட்டு தெலங்கானா மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள் புதன்கிழமை மூடப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஹைதராபாத் சிபி சீனிவாச ரெட்டி தெரிவித்துள்ளார். இன்று காலை 6 மணி முதல் 18ஆம் தேதி காலை 6 மணி வரை மதுபான பார்கள், மதுபான கடைகள், உணவகங்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும். இதனால் நேற்றைய தினமே மதுப் பிரியர்கள் பலரும் மதுபாட்டில்களை முன்கூட்டியே வாங்கி வைத்துவிட்டனர். ஆனாலும், பெரும்பாலானோர் மதுபானம் கிடைக்காமல் கள்ளச்சந்தையில் கிடைக்குமா என தேடி வருவதை பார்க்க முடிகிறது.

தொடர்புடைய செய்தி