தஞ்சாவூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10. 83 லட்சம் விடுவிப்பு

63பார்த்தது
தஞ்சாவூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10. 83 லட்சம் விடுவிப்பு
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமீறல் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 10 லட்சத்து 83 ஆயிரத்து 500 விடுவிக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து பொதுத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைப்
படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க 72 பறக்கும்படை குழுக்களும், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 8 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை தொகுதியில் பறக்கும்படை குழு பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது வாகனங்களை சோதனை செய்ததில் நடத்தை விதிமீறலின் காரணமாக ரூ. 10 லட்சத்து 83 ஆயிரத்து 580 பறிமுதல் செய்யப்பட்டு சார்நிலை கருவூலகங்களில் ஒப்படைக்கப்பட்டது, இந்த நிலையில் பணத்தை
விடுவிப்பது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் படி தேர்தல் செலவின மேல் முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொகை உடனடியாக விடு
விக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் மாவட்ட மேல் முறையீட்டு குழுவில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விடுவித்துக் கொள்ள ஏதுவாகும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் மாவட்ட அளவில் தினசரி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஆட்சியர் தீபக்ஜேக்கப் கூறி உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி