புதுச்சேரியில் இன்று 144 தடை உத்தரவு

37420பார்த்தது
புதுச்சேரியில் இன்று 144 தடை உத்தரவு
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனால் இன்று மாலை 6 மணிக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 20ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் குலோத்துங்கன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதே போல் மதுபான கடைகளுக்கும், கலால் துறையினர் சீல் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி