விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து

57பார்த்தது
விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில், வாக்குப்பதிவு தினத்தில் சுற்றுலா உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. திரையரங்குகளும் பகல் காட்சி திரையிடப்படாது என அறிவித்துள்ளன. இரவுக்காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி