குறிப்பாக மாநகரில் பழைய பேருந்து நிலையம், 5 ரோடு, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கறிக்கடைகளில் மக்களின் கூட்டம் இயல்பை விட அதிகமாக இருந்தது. இது குறித்து கறிக்கடை வியாபாரி கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று விற்பனை குறைவாக தான் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு அம்மாவாசை அடுத்த நாள் வருவதால் இன்று ஏராளமான மக்கள் வீடுகளில் அசைவ உணவு சமைப்பதற்காக கறிகளை வாங்கிச் சென்றனர், ஆடு கிலோ ₹200 உயர்ந்து 700 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனையானது. கோழி 180 முதல் 220 ரூபாய் வரை விற்பனையானது. தீபாவளி திருநாளில் கறி தேவை அதிகரித்ததால் விலையும் சற்று உயர்ந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'அதிமுக வாக்குகளை, தங்கள் வாக்குகளாக காட்ட பாஜக முயற்சி' - திருமா கருத்து