தமிழ்நாட்டின் மாநில மலராகத் திகழும் செங்காந்தள் மலர் காந்தள் அல்லது கார்த்திகைப் பூ என்பதுபோன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் இந்த மலர் காணப்படுகிறது. கார்த்திகை மாதம் பூக்கும் இம்மலரை இரவில் பார்க்கும் போது தீ கொளுந்துவிட்டு எரிவதுபோலக் காணப்படும். செங்காந்தள் மலர் மட்டும் வாடினாலும் உதிர்வதில்லை. இந்தப் பூவை உற்றுப்பார்த்தால், கண்வலி வரும் என்று சொல்கிறார்கள், அதனால் இதை `கண்வலிப்பூ’ என்றும் அழைக்கிறார்கள்.